Header Ads

உடல் எடை குறைக்க உதவுமா எலுமிச்சை சாறு….?

 


தினமும் எலுமிச்சை சாறு குடிப்பதன் முலம் சிறுநீரில் உள்ள சிட்ராஸ் அளவை குறைத்து சிறுநீர்ப்பையில் கல் சேர்வதைத் தடுக்க உதவுகிறது.

ஏதேனும் பூச்சிக்கடியால் தோலில் அரிப்பு ஏற்பட்டால் எலுமிச்சை பழத்தை சிறிதாக நறுக்கி கடிபட்ட இடத்தில் தடவ வேண்டும்.

பூச்சிக்கடியால் ஏற்பட்ட அலர்ஜியை இது குறைக்கும். எலுமிச்சை பழசாறு உடலை குளிர்ச்சியாக்கும் தன்மை கொண்டது.

எலுமிச்சை மூலம் தோல் எரிச்சல், வெப்ப நோய்கள் தாக்குதல் போன்றவற்றிலிருந்து உடலுக்கு பாதுகாப்பு கிடைக்கும்.

எலுமிச்சைப் பழச்சாறை இளஞ்சூடான தண்ணீரில் கலந்து குடித்தால் வயிற்றுக்கு மிகவும் நல்லது.

செரிமானப் பிரச்சனைகள், குமட்டல், வாந்தி, போன்ற சிக்கல்களுக்கெல்லாம் எலுமிச்சைப் பழச்சாறு சரியான நிவாரணியாக செயல்படுகிறது.

தினமும் ஏதேனும் ஒரு வகையில் எலுமிச்சை சாறை சேர்த்து கொள்ளவதன் முலம் உடல் எடை குறையும்.

No comments

Powered by Blogger.