Header Ads

பேஸ்புக் நட்பால் மனைவிக்கு அதிர்ச்சி கொடுத்த கணவன்!

 


இந்தியாவில் உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர் சுனிதா.

இளம்பெண்ணான இவருக்கு அபிஷேக் ஆர்யா என்பவர் பேஸ்புக் மூலம் நட்பாகு பழகி பின்னர் இருவரும் காதலித்தனர்.

இதனை தொடர்ந்து அபிஷேக் – சுனிதா திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்துக்கு பின் வேலைக்கு செல்லாமல் இருந்த அபிஷேக் சுனிதாவிடம் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்து சண்டை போட்டுள்ளார்.

அப்போது தான் அபிஷேக்கின் சுயரூபம் சுனிதாவிற்கு தெரியவந்தது

இந்நிலையில் அபிஷேக் சில மாதங்களுக்கு பின் வீட்டிலிருந்து மாயமானார்

அப்போது வீட்டிலிருந்த ரூ 3 லட்சம் மதிப்பிலான நகைகள், ரூ 1 லட்சம் பணத்தை எல்லாம் திருடி கொண்டு ஓடியிருக்கிறார் என்பதை கண்டுபிடித்த சுனிதா அதிர்ச்சியடைந்தார்.

ஒரு வருடமாக அபிஷேக் குறித்து எந்தவொரு தகவலும் கிடைக்காத நிலையில் அவர் கொல்கத்தாவில் இருப்பதாக சமீபத்தில் சுனிதாவுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து பொலிசாருடன் சேர்ந்து கொல்கத்தாவுக்கு சுனிதா சென்ற போது அங்கு அவருக்கு ஒரு குடும்பம் இருப்பது தெரியவந்தது.

மேலும் அங்கு அபிஷேக் இல்லை என தெரியவந்த நிலையில் அவரை பொலிசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

அவர் கிடைத்த பின்னர் மேலும் பல மோசடிகள் குறித்து தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.