Header Ads

பிளாக் டீ தொடர்ந்து அருந்துபவர்களுக்கு ஏற்படும் மாற்றங்கள் !!


 

உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கும் அல்லது அந்த முயற்சியில் ஈடுபட்டிருப்பவர்களுக்கும் சிறந்த ஒரு பானமாக பிளாக் டீ இருக்கிறது.

இரத்தத்தில் சர்க்கரையின் அளவு மற்றும் கொலஸ்ட்ராலின் அளவை தியாஃப்ளேவின் கட்டுப்படுத்துகிறது. ஒரு கப் காஃபியில் உள்ள காஃபைனின் அளவில் மூன்றில் ஒரு பங்கு பிளாக் டீயில் உள்ளது.

கடுமையான மலச்சிக்கலால் அவதி படுபவர்கள் தினந்தோறும் காலை மற்றும் மாலை வேளைகளில் பிளாக் டீ தொடர்ந்து அருந்தி வந்தால் தினமும் மலம்கழிக்கும் நிலை உண்டாகி மலச்சிக்கல் தீரும்.

பிளாக் டீயில் எல் தியானைன் என்ற அமினோ அமிலம் உள்ளது. இது நாம் செய்பவற்றில் கவனம் செலுத்த உதவுவதோடு இளைப்பாறுதலையும் அளிக்கிறது. மனஅழுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய ஹார்மோன்களை குறைக்கிறது.

பிளாக் டீயில் அமிலத்தன்மை அதிகம். இது இருதயத்தின் ஆரோக்கியத்தை காக்கிறது. இருதயம் மற்றும் இரத்தநாளங்களை பாதுகாக்கும் தியாஃப்ளேவின் என்ற பிளாக் டீ யில் உள்ளது.

பிளாக் டீ தொடர்ந்து அருந்தி வருபவர்களுக்கு ரத்தநாளங்களில் அடைப்புகள் ஏற்படுவதை தடுத்து உடலில் அனைத்து பகுதிகளுக்கும் ரத்த ஓட்டம் சீராக கிடைக்க பெற்று, இதயத்தை பலப்படுத்தி, இதய நோய்கள் வற்றாமல் தடுக்கும்.

No comments

Powered by Blogger.